பருவநிலைப் பற்றுச்சீட்டுகளை எவ்வாறு பெற்று செலவழிப்பது
For more information, please refer to the Frequently Asked Questions here.
உங்களது பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை
-
go.gov.sg/cv-claim இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். “Climate Vouchers” என்பதன்மீதுதட்டுங்கள்.

-
“சிங்பாஸ்” பயன்படுத்தி உட்பதிவு செய்யுங்கள். ஒரு குடும்பத்தின் சார்பில் ஒருவர் மட்டும் இதைச் செய்தால் போதும்.

-
உங்களது பருவநிலைப் பற்றுச்சீட்டுகளின் இணைப்பைக் குறுந்தகவல்வழி பெறுங்கள். பற்றுச்சீட்டுகளைக் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ள, குறுந்தகவலை அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.

முக்கியம்
go.gov.sg/cv-claim இணையத்தளத்திலிருந்து பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் (அதாவது, படிநிலைகள் 1 முதல் 3 வரை நிறைவுசெய்த பின்னர்), gov.sg-இடமிருந்து தனித்துவமான பற்றுச்சீட்டு இணைப்பைக் கொண்ட குறுந்தகவல் பெறுவீர்கள்.
நீங்கள் பெறும் தனித்துவமான பற்றுச்சீட்டு இணைப்பு https://voucher.redeem.gov.sg/ உடன் தொடங்குகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மற்ற முன்னிணைப்புகளுடன் தொடங்கும் எந்தவொரு பற்றுச்சீட்டு இணைப்புகளையும் நம்பாதீர்கள் அல்லது கிளிக் செய்யாதீர்கள்.
உங்கள் பருவநிலைப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதன் பொருட்டு, தேசியச்சுற்றுப்புற அமைப்பு, பொதுப் பயனீட்டுக் கழகம், RedeemSG ஆகியவை உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்களைக் கோரும் எந்தவொரு குறுந்தகவலையும் அனுப்ப மாட்டார்கள். நீங்கள் அத்தகைய குறுஞ்செய்தியைப் பெற்றால், அந்த இணைப்பைக் கிளிக் செய்யவோ அல்லது பதில் அனுப்பவோ வேண்டாம்.
உங்களது பருவநிலைப் பற்றுச்சீட்டுகளை செலவிடும் வழிமுறை
-
பற்றுச்சீட்டுடன் முகவரி ஆதாரத்தைக் காட்டுங்கள்.
-
செலவிட விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுங்கள். பிறகு, “பற்றுச்சீட்டைக் காட்டுங்கள்” என்பதன்மீது தட்டுங்கள்.
-
காசாளரிடம் விரைவுத் தகவல் குறியீட்டைக் காட்டுங்கள்.
மேல்விவரங்களுக்கு, அன்புகூர்ந்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பாருங்கள்.